சாணக்கியனுக்கு மற்றுமொரு உயரிய பொறுப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் நாடாளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும்.

இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன.

மேலும் இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.