மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள பாடசாலைகள்!


 தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்து மேல் மாகாணத்திலும் நாளையதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்காக மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை முதல் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மேலும் தாமதம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.