வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 594 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 594 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் ஒன்பது விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் வேலைவாய்ப்புக்காக குவைத் சென்றிருந்த மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களால் இலங்கைக்குத் திரும்ப முடியாத 376 இலங்கையர்கள் இன்று காலை இரண்டு இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்களின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்தததும் விமான நிலையத்தில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வகத்திலிருந்து இவர்கள் இலவச பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் இலங்கைக்கு வந்த எனைய 218 பேர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஊழியர்களால் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்களையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலக்கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 249 இலங்கையர்கள் ஆறு விமானங்களின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி புறப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.