ஈழத்து இயக்குநர் கேசவராஜன் காலமானார்!


ஈழத்து திரைப்பட இயக்குநரான நவரட்ணம் கேசவராஜன், இன்று (சனிக்கிழமை) அதிகாலை நோய் காரணமாக காலமானார்.

அரியாலையை பிறப்பிடமாக கொண்ட கேசவராஜன், கண்டியில் தனது கல்வியை தொடர்ந்தார். பின்னர் சினிமா மீதான ஈர்ப்பினால் இயக்குநரானார்.

1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார். அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார்.

பல வீதி நாடகங்கள், மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இறுதியாக அவர் பனைமரக்காடு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அவரின் இறுதிக்கிரிகைகள் நாளை காலை, அன்னாரின் தற்காலிக முகவரியான 31.மதவடி ஒழுங்கை, சுதுமலை வடக்கு, மானிப்பாய் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.