பல்கலைகழகத்தில் மேலும் 10 000 மாணவர்களை இணைக்க தீர்மானம்!!


பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இந்த ஆண்டில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை தொடர்பான திட்டம் மீளாய்வு செய்யப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களை உள்வாங்கும் புதியமுறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.