காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியே நீடிக்கிறது!


புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டணி விடயத்தில் எந்ததொரு குழப்பமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி ஒப்புக் கொண்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி  கூறினார்.

இதேவேளை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி,  எதிர்வருகின்ற 26 ஆம் திகதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.