புலனாய்வாளர்களுக்கும் அரசியியல்வாதிகளுக்கும் காட்டிக்கொடுக்கும் ஓர் உதவி பிரதேச செயலாளர்!

 


அரச உத்தியோகத்தர்களை புலனாய்வாளர்களுக்கும் அரசியியல்வாதிகளுக்கும் காட்டிக்கொடுக்கும் ஓர் உதவி பிரதேச செயலாளர் தற்போது வவுனியாவில் பல பொதுப்பணிகள் மற்றும் மக்கள் சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இலக்கு வைக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.


 அலுவலக நேரம் தவிர்ந்த வேளைகளில் பொதுப்பணியினை செய்தாலும் கடமை நேரத்தில் செய்வதாக உதவி பிரதேச செயலாளருக்கு ஓர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் வாதியொருவர் தொடர்ந்து தெரிவித்து வந்தார். 


அண்மையில் கூட ஓர் அலுவலகத்தில் இரண்டு அரச அலுவலர்களை புலனாய்வாளர்களுக்கு உதவி பிரதேச செயலாளர் ஒருவர் இனங்காட்டி கொடுத்துள்ளார். அத்தோடு அவ்வுத்தியோகத்தர் வீடுகளுக்கும் சென்று புலனாய்வாளர்கள் எனக்கூறிக் கொண்டு அச்சுறுத்தல்களையும் அவர்கள் மேற்கொண்டனர். 


ஓர் அரசாங்க ஒட்டுக்குழுவின் ஆதரவாளரான இந்த உதவிப் பிரதேச செயலாளரின் நடவடிக்கையினால் ஒருசில உத்தியோகத்தர்கள் மற்றும் ஒருசில கிராம அலுவலர்களை மனவேதனை அடைய செய்துடன் தங்கள் கடமைகளய சீராக செய்யமுடியாதுள்ளதுடன் அவரது நடவடிக்கைகள் பற்றியும் அறியத்தந்துள்ளனர்.

Blogger இயக்குவது.