புரமோஷன் பெற்றார் 'வலிமை' பட இயக்குனர்!!

 


அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் இயக்குனர் எச்.வினோத் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அவர் தந்தையாக புரமோஷன் ஆகியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அஜித் நடித்து வரும் ‘வலிமை; படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்றும் இயக்குனர் எச்.வினோத் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. போனிகபூர் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.