ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வார்த்தாவின் வாழ்த்து!!
வார்த்தா என்ற செயலி உங்களுடைய விருப்பமான பாட்காஸ்ட்யை விருப்பமான மொழியில் கேட்க உதவும் ஒரு செயலி. அனைத்து வகையான பாட்காஸ்ட்யையும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கும் ஒரு அபூர்வ செயலி
இன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த தினத்தை அடுத்து அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் ’ஏ.ஆர்.ரஹ்மான் - இசை உலகின் முடிசூடா மன்னன்’ என்ற இசைத்தொகுப்பு நிகழ்ச்சி வார்த்தா செயலியில் ஒலிபரப்பாகியுள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சிறுவயது நிகழ்வுகள், அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு முதல் ஆஸ்கார் வென்று இன்று உலகம் முழுவதும் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருப்பது வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இசைத்தொகுப்பில் கூறியிருப்பதாவது:
குடும்பத்தின் பாரங்களை இளம் வயதிலேயே சுமக்க கற்றுக்கொண்டவர், ஆளுமை திறன் உள்ளவர், தனது தந்தையை ஒரு உதாரணமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கியவர், மூன்று வேளை உணவு உண்பதற்காக வழிதேடி தெரிந்த ஒரு நபர், நம்முடைய வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த ஒரு நபர், ஆனால் தற்போது அவருடைய இசைக்கு அடிமைகளாக கோடிக்கணக்கான உள்ளனர். பல கோடி ரசிகர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் உள்ளவர்கள். அவர்தான் இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலீப் குமார்.
திலீப் குமார் என்றவுடன் வட இந்திய இசை அமைப்பாளர் என்று எண்ணவேண்டாம். உலக அளவில் போற்றப்படும் ஒரு விருதான ஆஸ்கார் விருதை பெறும் போது கூட அந்த மேடையில் தனது தாய்மொழியான தமிழில் ’எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று ஒலித்த ஒரு நபர். அவர்தான் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள்
இவருடைய இயற்பெயர் திலீப்குமார். அவருடைய தந்தை திரு சங்கர் அவர்கள் இசை துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான்கு உடன்பிறப்புகளுடன் தாய் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த திலீப்குமார் ஒன்பது வயதில் இருந்த போது தந்தை இறந்ததால் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தன்னுடைய தாயின் வழிநடத்தல் மற்றும் வீட்டில் இருக்கும் இசைக் கருவிகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டி வந்தனர்
தான் சிறுவயதில் கஷ்டப்பட்ட போதெல்லாம் ’உன்னால் முடியும், உன்னால் கண்டிப்பாக முன்னேற முடியும்’ என்று அவருக்கு சிறு வயதில் இருந்தே ஊக்கம் கொடுத்த ஒரே நபர் திலீப்குமாரின் தாயார் மட்டுமே. வாழ்க்கையில் வறுமை உள்பட பல துன்பங்கள் வந்தபோது வேலைக்குச் செல் என்று பலர் அறிவுரை கூறிய போதிலும், ‘இல்லை இசைதான் என்னுடைய உலகம், இதுதான் என்னுடைய துறை’ என்று அந்தத் துறையிலேயே தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்
இந்த நிலையில்தான் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறார். அதன்பின் அவருடைய பெயர் ஏ.ஆர்.ரஹ்மான் என மாறுகிறது. மதம் மாறிய பிறகு அவருடைய வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது. இசைக் கலையை முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக அவர் இசைக் கல்லூரியில் சேர்கிறார். அந்த இசைக்கல்வியை முடித்த பிறகு அவருக்கு இசை குறித்த ஒரு ஞானம் கிடைக்கிறது. தன்னுடைய திறமையை வெளிப்படுத்த சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு சில விளம்பரங்களுக்கு அவர் இசையமைக்க ஆரம்பித்தார். பல விளம்பரங்களுக்கு அவர் இசையமைத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு காபி விளம்பரத்திற்கு இசை அமைப்பதற்காக விருதும் அவருக்குக் கிடைக்கிறது
அந்த விருது வழங்கும் விழாவில் தான் இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்தித்து, அவர் இயக்கிய ’ரோஜா’ என்ற படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இதற்கு முன் வந்த இசையமைப்பாளர்கள் ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி வந்து இசை அமைத்து காண்பிக்கும் நிலையில் ரஹ்மான் அவர்கள் ஒரே ஒரு கம்ப்யூட்டரை எடுத்து வந்து இதுதான் வருங்கால இசை என காண்பித்தது தயாரிப்பாளருக்கும் மணிரத்தினம் அவர்களுக்கும் புதுமையாக இருந்தது. உடனடியாக அவரை இசையமைப்பாளராக ’ரோஜா’ படத்தில் ஒப்பந்தம் செய்தனர். அன்றில் இருந்து அவருடைய வாழ்க்கையில் ஏற்றம் தொடங்கி இன்று வரை அவருடைய கிராபிக்ஸ் ஏறிக்கொண்டே இருக்கிறது. இதுதான் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் ஆரம்பகால கதை என்பது குறிப்பிட்டு ’இசை உலகின் முடிசூடா மன்னன்’ என்ற ஒலித்தொடர் இன்னும் தொடர்கிறது
கருத்துகள் இல்லை