மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர்நிலை!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் மீள புதுப்பிக்கமுடியாத வகையில் செயலிழந்துவிட்டதாக அறிய முடிகிறது.


கிட்டத்தட்ட 16 வருடங்கள் பழமை வாய்ந்த அந்த உபகரணம் இனி மீள் பாவனைக்கு திரும்பமாட்டாதாம்.


அவ்வாறாயின் இனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து விபத்துக்களால் தலையில் உபாதைக்குள்ளாகும் சிறியோர் முதல் பெரியோர் வரை CT scan பரிசோதனைக்காக பல கிலோமீற்றர் தூரங்களுக்கு இடமாற்றப்படுவர், அவர்களுக்கு உயிர் உத்தரவாதமில்லை.


நரம்பியல் தொடர்பான அத்தனை சத்திர சிகிச்சைகளுக்கும் மூல வழிகாட்டியான CT scan இயந்திரம் இன்மையால் அனைத்தும் தடைப்படும்.


பாரிசவாத நோய்க்கு ஆளாகும் அத்தனை உயிர்களும் மீளுயிர்ப்பின்றி நிரந்தர அவையவ பாதிப்புக்களை அடையும்.



புற்றுநோய் இனம்காணல் தாமதமாகும், அந்த கால தாமதத்தினுள் புற்று உடல் முழுவதும் பரவி ஈற்றில் பாலூற்றவேண்டிய சூழல் வரும்.


இந்த நவீன உலகில் நோய்களை விரைவாக இனம்கண்டறியும் பரிசோதனையாக CT scan மற்றும் MRI scan என்பன அத்தியாவசியமாகி நிற்கின்றன.


அப்படியாயின் அந்த இயந்திரம் மக்களின் உயிர்காப்புக்காக மட்டக்களப்பிற்கு மிக விரைவாக வந்தாக வேண்டும். அதனை யார் கொண்டுவருவது?


இப்போது அந்த போதனா வைத்தியசாலையின் பொம்மை பணிப்பாளராக கடமையாற்றும் பணிப்பாளரால் கொண்டுவர முடியுமா? அதற்கான ஆளுமை அவரிடமிருக்கிறதா? என்றால், இல்லவே இல்லை என்பதே மெய்த்தகவல்.


அவர் அந்த பதவியில் தனது உயிர்வாழ்வதற்கான தொழில் என்ற அடிப்படையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


அப்படியானால் வைத்தியசாலையில் அபிவிருத்திக்குழு என்று ஒன்று இருக்குமே! அது அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறது? எதுவுமில்லை, பணம் படைத்த, படிப்பறிவில்லாத சிலர் அங்கே அபிவிருத்தி எனும் பெயரில் கூடி கதைத்து தேநீர் அருந்தி கலைந்து செல்கின்றனர்.


அங்கே கடமையாற்றும் ஊழியர்கள் என்ன முயற்சிகளை செய்கின்றனர்? எதுவுமில்லை. அவர்களில் பலருக்கு அந்த வைத்தியசாலை ஒரு வருவாய் ஈட்டித்தரும் தொழில்கூடம்.


இயந்திரம் இருந்தாலென்ன? எது இயங்கினாலென்ன? அவர்களுக்கு நாளொன்று கடந்தால் போதும் என்ற மனநிலையே உண்டு.


ஒருசில வைத்தியநிபுணர்கள் மாத்திரம் மக்கள் மீது கரிசனை கொண்டு மண்மீது பற்றுக்கொண்டு அந்த வைத்தியசாலையை வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றனர்.


ஆனால் அந்த வைத்தியசாலையில் வியாபார நோக்கோடு உள்நுளைந்த மதனழகன் போன்ற நிபுணர்கள் சூழ்ச்சிகள் மூலம் யாவற்றையும் தகர்த்தெறிந்து வருகின்றனர்.


அப்படியாயின் மட்டக்களப்பின் அரசியல்வாதிகள் எதை செய்துகொண்டிருக்கின்றனர்?


அபிவிருத்தி நாயகர்கள் மட்டக்களப்பு மண்ணை ஏற்றி விற்றுக்கொண்டிருக்கின்றனர். ஏட்டிக்கு போட்டியாக ஆளாளுக்கு முகநூலில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.


படித்த எவனை மட்டக்களப்பு மக்கள் அரசியல் அதிகாரத்துக்கு அனுப்பினர்? சாராய குப்பிகளை பகிர்ந்தளிப்பவனைதானே அந்த மக்கள் தலைவனாக காண்கின்றனர். எப்படி அந்த மண் மீளும்.??


மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வேற, அவரையும் காணவில்லை ஐந்து வருட மாலையில்லாக் குறைகளை ஊர்... ஊராக சென்று தீர்த்து வருகிறார், இந்த லட்சனத்தில் பிரதேச வாதம், மாவட்ட மக்களை காப்பாற்ற வக்கற்ற தலைவர் எல்லாம் மக்கள் தலைவன், மக்கள் வாக்களிக்காமல் வந்தால் இது தான் நிலை, இந்த செய்தியின் பின் எத்தனை பேர் ஓடப் போகிறார்கள் பாருங்களன் மக்களே...


அப்படியாயின் இந்த உயர்ரக சுகாதார தேவைக்கு தீர்வென்ன? அரசு அந்த உபகரணங்களை மட்டக்களப்பிற்கு வழங்கி வைக்குமா?


அதனை வழங்கி வைக்கவேண்டி தேவை அரசுக்கு உண்டு.ஆனால் நாட்டின் இன்றைய சூழலில் அந்த விடயங்கள் வீரியமாக நடக்குமா?? அது நடக்க என்ன செய்வது? நடக்காவிட்டால் என்ன செய்வது?


தீர்வு இதுதான்.


மட்டக்களப்பின் பிரபல கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் சுந்தரலிங்கம் திலக்குமார் அவர்களை தலைமையாகவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களையும், இதயவியல் வைத்தியநிபுணர் அருள்நிதி மற்றும் இதயவியல் வைத்திய நிபுணர் ரஜீவன் போன்றோரை கொண்ட ஒரு துறைசார்ந்த குழு அமைக்கப்படவேண்டும்.


அந்த குழுவோடு அரசியல்வாதிகள் பக்கபலமாக நிற்கவேண்டும்.அந்த பலங்களினூடாக அரசை அணுகி குறித்த இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படவேண்டும்.


அதே வேளையில் ஐந்தரை கோடி ரூபாய் பெறுமதியான அந்த CT scan இயந்திரத்தை பெற்றுக்கொள்ள குறித்த குழு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்.


அதன் வழியே தனவந்தர்களிடமிருந்தும் புலம்பெயர்தேசத்து மக்களிடமிருந்தும் நன்கொடைகள் அறவிடப்பட்டு, ஒரு CT scan இயந்திரம் வாங்கப்பட்டு அச பொறிமுறைகள் ஊடாக அது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்படவேண்டும்.


இரண்டு முயற்சிகளும் துரித கதியில் முன் செல்லும் போது மக்களும் ஊக்கத்துடன் எல்லா முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி தமது சுகாதார தேவைகளை நிவர்த்திக்க முயற்சிப்பர்.


ஆகவே யாராவது ஒருவர் அல்லது இருவர் முன்வந்து மேற்குறித்ததான குழுவை உருவாக்கும் போது உங்களது பாசத்திற்குரிய உயிர்களை எமனிடமிருந்து மீட்டெடுக்க முடியும்.


அரசியல் தலைவர்கள் இந்த குழு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பது சால சிறந்து என்பதே இந்த கட்டுரையை எழுதுபவரின் கருத்தாக உள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.