என் பலம் எனக்கே இப்பதான் தெரியுது- ஆரி!

 


சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’என் பலம் என்னன்னு எனக்கே தெரிஞ்ச ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்று கூறியுள்ளார்


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு சிலருக்கு 19 வயதிலேயே வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த வயதில் நான் தெருத்தெருவாக வாய்ப்புக்கு அலைந்தேன். என் வாழ்க்கையில் சுமார் 10 வருடத்தை நான் தொலைத்து விட்டு, என்னை யார் என கோடிக்கணக்கான மக்கள் முன் நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 17 பேர்களோடு சேர்ந்து நான் சரிசமமாக போட்டி போட்டு ஜெயித்து இருக்கின்றேன்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய பலம் என்ன? என்னுடைய பலவீனம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. எனக்கு இவ்வளவு பொறுமை இருக்கிறதா? என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் எனக்கே தெரியவந்தது


வாழ்க்கையில் உழைப்பவன் ஜெயிப்பான், நேர்மையாக இருந்தால் நமக்கென்று ஒரு இடம் கிடைக்கும், நேர்மையாக இருந்தால் மக்கள் பாராட்டுவார்கள் என்பதை இந்த வெற்றி மக்கள் மனதில் விதைத்து உள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று ஆரி தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.