முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் எறிகணைகள் மீட்பு!


 முல்லைத்தீவு முள்ளியவளைபகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த எறிகணைகளை இனம் கண்டவேலையாட்கள் முள்ளியவளை பொலீஸ் நிலைத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த இடத்தில் வெடிபொருள் தொடர்பான ஆய்வினை படையினர் மேற்கொண்டுள்ளார்கள்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட நவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த வெடிபொருட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.