மூதூரிலுள்ள சகல கடைகளையும் நாளை திறக்க தீர்மானம்!


 மூதூர் கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்திற்கமைவாக  நாளை (4) மூதூரில் உள்ள சகல கடைகளையும் காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  கொரொனா பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளைப் பேணி திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என பிரதேச செயலாளர் முபாறக் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மருந்தகம் மற்றும் பேக்கரிகள் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியைப் பெற்று மாலை 4.00 மணிக்குப் பிறகும் திறக்க முடியும் என்றும் கொரொனா பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை  மீறும்  வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.