வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா பரிசோதனை!


 கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

அத்துடன் கனடாவின் அனைத்துவிமான நிலையங்களிலும் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே கனடாவின் முக்கிய விமான நிறுவனங்கள் மெக்‌ஷிக்கோ மற்றும் கரீபியன் பிராந்தியத்துக்கான விமான சேவையினை இன்று முதல் எதிர்வரும் மூன்றுமாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகவும் தரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.