இராணுவப் பயிற்சி என்பது ஒர் முன்மொழிவு மட்டுமே!


 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவது என்பது ஓர் முன்மொழிவு மட்டுமேயாகும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் மதிப்பாய்வு செய்து இந்த முன்மொழிவு பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்த மற்றும் ஜனநாயக நாடுகளில் இவ்வாறான இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும், பயிற்சியை நிராகரிப்பவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவ மயமாக்கல் முன்னெடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.