யாழ் மாணவிகளின் மரணவிவகாரத்தில் வெளியாகியுள்ள பகீர் தகவல்!


 பிரான்சில் மருத்துவ கல்விக்காக சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு யுவதிகள், அவர்களது காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பொலிஸ் விசாரணை தொடர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் எஸ்.கார்த்திகா (20). அவர் பிரான்சில், அவரது காதலனான தமிழ் இளைஞனால் கடந்த ஜனவரி 13ஆம் திகதி குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்லைப்பிட்டியில் படித்த அவரது ஒரே கனவு வைத்தியராக வேண்டுமென்பதே.

எனினும், உயர்தரத்தில் பல்கலைகழகத்திற்கு தெரிவாகாததால் மிகுந்த மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்.

அவரது உறவினர்கள் பிரான்ஸில் வசிக்கிறார்கள். அவர்களின் மூலம் பிரான்ஸிலுள்ள பல்கலைகழகம் ஒன்றில் மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்து, அதற்கு தெரிவானார்.

2019 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு பிரான்ஸ் சென்றார்.

தன்னுடன் பல்கலைகழகத்தில் கல்வி கற்ற யோகேஸ்வரன் என்ற அடையாளத்தை கொண்ட 24 வயது தமிழ் இளைஞனை காதலித்தார். அவர் நீண்டகாலமாக அவர் பிரான்சில் இருந்தார்.

13ஆம் திகதி அவர் காதலனால் கொல்லப்பட்டார். அவர் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அவரது உடலில் பல கத்திக்குத்து காயம் இருந்தது.

கார்த்திகாவை கொன்று விட்டு அவன் தப்பியோடி விட்டான்.

சாவகச்சேரி மந்துவிலை சேர்ந்தவர் சினேகா சந்திரராசா (20).

பிரான்சில் பிறந்த 24 வயதான இளைஞனை அவர் காதலித்து வந்தார்.

இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சினேகா பிரிந்து சென்றுள்ளார். 3 வாரங்களாக இருவருக்குள்ளும் பெரும் இழுபறி நிலவியது. கடந்த 8ஆம் திகதி, சினேகா இருந்த இடத்திற்கு சென்ற காதலன் அவருடன் முரண்பட்டுள்ளார். ஆத்திரத்தில் சினேகாவை கழுத்தை நெரித்தே கொலை செய்துள்ளான்.

பின்னர் அங்கிருந்து தப்பியோடினான்.

இரண்டு காதலர்களும் நீண்டகாலமாக தமது காதலிகளை அடித்து சித்திரவதைக்குள்ளாக்கியதாகவும், ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைமறைவாகியுள்ள கொலையாளிகளை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.