தாமதமாக வந்ததால் கணவர் மீது எண்ணெய் ஊற்றிய மனைவி!


 ​வேலைக்கு சென்றுவிட்டு தினமும் தாமதமாக வருவதால் ஆத்திரம் அடைந்த மனைவி, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் சிவ்குமாரி அஹிர்வார்(28) – அரவிந்த் அஹிர்வார்(35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

அரவிந்த் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அரவிந்த் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு தினமும் தாமதமாக வருவதால் அவருக்கும் மனைவி சிவ்குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவ்குமாரி, அரவிந்திடம் பலமுறை சீக்கிரம் வீட்டுக்கு வருமாறு கூறியும் ,அரவிந்த் அதை பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே லேட்டாகவே வந்துள்ளார்

கடந்த வாரம் அரவிந்த் இரவு லேட்டாக வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். பின்னர், எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். கோபம் குறையாத மனைவி சிவ்குமாரி, கொதிக்கும் எண்ணெய்யை தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கணவரின் முகத்தில் மீது ஊற்றியுள்ளார்.

அதுவும் அதிகாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொதிக்கும் எண்ணெய்யால் வலி தாங்க முடியாமல் அரவிந்த் துடித்துள்ளார். உடனடியாக அரவிந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முகம் வெந்து போன அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டது .+

இதையடுத்து சிவ்குமாரி மீது புகார் அளிக்கப்பட்டது .அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது , தான் கோபத்தில் செய்த தவறுக்கு மனம் வருந்துவதாக கூறினார்.​

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.