பட்டினியாக இருக்கிறோம் - கொரோனா முகாமில் !


 இன்று காலையில் உள்ளத்தை உருக்கிய குரல் பதிவொன்றை கேட்டேன் அது கரடியனாறு கொரோனா தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து எனது ஊடக நண்பர் ஒருவருடையது அவர் மிகவும் கவலையோடு தனது அதங்கத்தை தெறிவித்து இருந்தார்.

அவர் தெரிவித்த விடயத்தை அவ்வாறே கீழே பதிவு செய்துள்ளேன்..

நான் கரடியனாறு கொரோனா தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து பேசுகிறேன் இங்கு வழங்கப்படும் உணவு உட்கொள்வதற்க்கு பொருத்தமானதாக இல்லை. எங்களுக்கு இங்கு வழங்கடும் உணவை உட்கொள்ள முடியாமல் பட்டினியாக இருக்கிறோம்..

இங்கு தனிமைப் படுத்தப்பட்டவர்களில் வயோதிபர்கள்,தொற்றா நோயாளிகள், சிறுவர்கள் என பலரும் இருக்கிறார்கள்..

இங்கு வழங்கப்படும் உணவை உட்கொள்ளுவதானால் தனிமைப் படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் வீடுகளுக்குச் செல்லும் போது வேறு நோய்களுடனே செல்லக்கூடிய துரதிர்ஷ்டம் ஏற்படும் என அச்சமாக உள்ளது.

இது விடையத்தில் பல பொது நிறுவனங்களின் சம்மேளனத்தில் முக்கிய பதவி வகிக்கும் உறுப்பினர்களிடம் கூறியும் இதுவரை எந்த முன்னெடுப்புக்களும் எடுக்கப்படவில்லை என்பது கவலையும் வேதனையும் தருகிறது..

தயவுசெய்து சமூக நிறுவனங்கள், அமைப்புகள், தனவந்தர்கள் எங்களது நிலையை கவனத்திற்கொண்டு உணவளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.