தப்பி ஓடிய தொற்றாளர்கள் சிக்கினர்!


 பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;

தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.