நாட்டை ஒரு மாத காலத்திற்கு முடக்கவேண்டும்!


 தற்போது இலங்கையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு முழு நாட்டையும் ஒரு மாத காலத்திற்கு தனிமைப்படுத்துவதே என இலவச சுகாதாரச் சேவைக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையான கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் , கொரோனா வைரஸ் பரவுவதை தற்போதைய முறையில் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றும் அதன் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையை கட்டாயம் முழுமையாக முடக்க வேண்டும என்ற கருத்தும் கூறப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வைரஸ் அழிக்கப்பட வேண்டும் எனவும், குறித்த அந்தக் காலம் இரண்டு அல்லது நான்கு வாரங்களாக என்று தீர்மானித்த பின்னர் முழு நாடும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.