ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!


 நாட்டில் இன்று முதல் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி 74 ரயில் சேவைகள் கரையோரப் பாதையிலும், 64 ரயில் சேவைகள் பிரதான பாதையிலும், 26 ரயில் சேவைகள் புத்தளம் பாதையிலும், 12 ரயில் சேவைகள் களனி பள்ளத்தாக்கு வழியிலும், இன்று முதல் இந்த வாரத்திற்கான வடக்கிற்கான 6 ரயில் சேவைகளும் ஆரம்பமாகும். 

ரயில் பயணங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், நீண்ட தூர ரயில் பயணங்கள் இன்னும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.