கஜமுத்துக்களை விற்க முயற்சித்தோர் கைது!


 உடப்புஸ்ஸலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்க முற்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

உடப்புஸ்ஸலாவ பகுதியில் நேற்று முன்தினம் மாலை சட்டவிரோதமான முறையில் ஐந்து கஜமுத்துக்களை விற்க முயற்சித்த சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை மற்றும் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஜீப் ரக வாகனம் , மோட்டார் சைக்கிள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உடப்புஸ்ஸலாவ பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.