மன்னாரில் ஒவ்வொரு 100 பரிசோதனையிலும் 4 தொற்றாளர்கள்!


 மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு 100 பிசிஆர் சோதனையிலும் 4 பேர் வரையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகிறார்கள் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 123 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 140 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் மன்னார் மாவட்டத்தில் 2849 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 7649 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒவ்வொறு நூறு பிசிஆர் பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இது மன்னார் மாவட்டத்தில் தொற்றின் நிலை அதிகரித்து காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.

எனவே மக்கள் அவதானத்தோடு, பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.