எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல இயக்குநர்!!

 


இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி நடிகை குஷ்பு மற்றும் மகள்களுடன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்தப் பதிவில் “Our strength. Our world. Happy birthday Love” என நடிகை குஷ்பு குறிப்பிட்டு இருப்பது பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.


நடிகை குஷ்பு அரசியல், நடிப்பு, சின்னத்திரை எனப் படு பிசியாக இருந்தாலும் தொடர்ந்து குடும்பத்தோடு தனது நேரத்தை செலவழித்து அவர்களோடு இணைந்து பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஜோடியை பார்த்து பலரும் மெச்சி வருகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய முதல் படம் முறைமாமன். இந்தப் படத்தில் குஷ்பு, ஜெயராம், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.


அப்படத்தை இயக்கியபோது சுந்தர் சி-க்கும் நடிகை குஷ்புக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அடுத்த 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தற்போது 20 ஆண்டில் சில்வர் ஜுப்ளியை கொண்டாடி வருகின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “உள்ளத்தை அள்ளித்தா”, “அருணாச்சலம்”, “அன்பே சிவம்” போன்ற சீரியசான படங்களைத் தவிர “மேட்டுக்குடி“, “வின்னர்“ “நாம் இருவர் நமக்கு இருவர்“, “லண்டன்“ “கலகலப்பு” போன்ற காமெடி படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வகையில் கடந்த 2006 இல் “தலைநகரம்” படத்தில் நடிப்பிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து அரண்மனை வெர்ஷன் படங்களில் கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.