பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட நடவடிக்கை எடுங்கள்!


 தனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட உடன் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதுள்ளதாக யாழ்ப்பாணம் - மண்டைதீவைச் சேர்ந்த தந்தையொருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு தனது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான நஸ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை, எனத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, மண்டைதீவுப் பகுதியில் வயற் கரையோரம் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 மற்றும் 5 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.