அகதி முகாமில் இலங்கை தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை!


 தமிழகம் – திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கலசபாக்கம் பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.