சொக்லேற் கனவுகள் 13 - கோபிகை!!


காலம் மெல்ல

கரைந்துகொண்டிருந்தது.

ஆதித்தனை விட்டுப் 

பிடிக்க நினைத்தாள் 

கனிகா. 


ஆனால் அனுதியோ,

மைத்துனனின் 

அசைவுகளை

சின்னச்சின்ன

புள்ளியாய் அடுக்கி

மனக்கோலமிட்டாள்.


இப்போதெல்லாம்

அனுதிக்கு,

ஆதித்தன்

வித்தியாசமாய்

தெரிந்தான். 


ஓணான் எனவும்

ஒட்டகம் எனவும்

பலபெயரால் அவளால் 

அழைக்கப்பட்டவனிடம்

ஒட்டியிருந்த அழகு

இப்போதுதான்

அவளுடைய கண்ணுக்குப்

புலப்பட்டது. 


இவள் பலதடவை 

கனிகாவிடமும்

ஆதியிடமும் 

கேட்டுப் பார்த்துவிட்டாள். 


இருவருமே பதில்

தரவில்லை - ஆனால்

அந்தச் சம்பவம் நடந்து

சில நாட்களில், 

கனிகா, 'சித்தி வீட்டில்

தங்கிப் படிக்க' என

நகரத்திற்குச் சென்று

விட்டாளே....


இருவருக்குள்ளும் 

ஏதோ நடந்திருக்கிறது

என்பது மட்டும்

அனுதிக்கு தெளிவாய் 

புரிந்துபோனது.....


அப்போது

பல்கலைக்கழக

இறுதி ஆண்டில்

இருந்தாள் அனுதி. 


நரம்பியல் 

வைத்திய நிபுணராய்

பதவி பெற்றிருந்தான்

ஆதித்தன். 


அனுதி தன் மனதிற்குள்

பொத்திப் பொத்தி 

வளர்த்த காதலுக்கு

தன் அன்றாட செயல்களால்

நீரூற்றி வளர்த்தான் ஆதி. 


காலையில் அவளை

பல்கலையில் இறக்கிவிட்டு

மாலையில் தவறாது வந்து 

அழைத்துச் சென்றுவிடுவான்


அவளுக்கு நேரமாகும்

என்றால் கூட 

அருகில் எங்கேனும்

காத்திருந்து தானேதான்

அழைத்துச் செல்வான். 


சிறு வயது முதலே

அனுதி சாப்பிட்டாளா,

அனுதி படிக்கிறாளா,

அனுதி ரியூசன் போனாளா,

அனுதிக்கு ஏன் இருமல்?

என்பது வரை

அவன் மூச்சோடு கலந்து

வாழ்ந்தவள் தானே

அனுதி. கனவுகள் தொடரும்

கோபிகை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.