சொக்லேற் கனவுகள் 12- கோபிகை!!

 


நிறம்மாறிய 

நினைவுகளுக்குள்

நீச்சலடித்துக்கொண்டிருந்தான்

ஆதித்தன். 

நாளொன்று 

நகர்ந்து முடிந்திருந்தது. 


பீப்..பீப்.....

அலைபேசியில் 

அழுத்தமாய் ஒலித்தது

குறுஞ்செய்திக்கான ஒலி. 


நிமிர்ந்து பார்த்தான்,

நேரம் பத்து மணி.

இந்த நேரத்தில்.....

வேறு யாருமல்ல,

அத்தை மகளாய்த்தான்

இருக்கவேண்டும்.


எடுத்துப் பார்த்தான்,

அவளேதான்,

அழைப்பை இணைத்து

அலுப்பாய் கேட்டான்,

 'என்னடி?' 


'டேய்....ஆதி...

நித்திரையாடா?'

இராகமாய்

இழுத்துவைத்தாள். 


'மண்டு......

நித்திரை கொள்றவன்

எப்பிடி கதைப்பான்?

சொல்லு.....'

அவன் கூவ,


'இல்லடா,

நாளைக்கு எக்ஸாம்

கடைசி நாள், 

சில சந்தேகம்,'

அவள் முடிக்கும்முன்

அறுந்தது அழைப்பு. 


எருமை....எருமை....

கதைக்கும் போது

கட் பண்ண கூடாது என்ற

மேனஸ் கூடவா தெரியாது?

முணுமுணுத்தபடி இருந்தாள். 


கதவருகில் அவன்

காலடி ஓசை....

'அவளுக்கு ஏதோ 

டவுட்ஸ்ஸாம்...அத்தை'

அம்மாவிடம் சொல்லுவது

அப்படியே கேட்டது.


இந்த அதிதான்

எவ்வளவு இனியவன்,

நெஞ்சோரத்தில்

சில மத்தாப்பூக்கள்....

அனுதிக்கு....கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.