கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட FAST FOOD வகை உட்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!


கொத்து (KOTTU), ப்ரைட் ரைஸ் (FRIED RICE), ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (FAST FOOD) வகைகளை உட்கொள்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


கொத்து, ப்ரைட் ரைஸ், ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (Fast Food) வகைகளை உட்கொள்வதன் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.


உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உரிய வகையில் நித்திரை கொள்வது கட்டாயமானது எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே குறிப்பிடுகின்றார்.

Blogger இயக்குவது.