போர்க்குற்றம் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை!

 


2009 , இறுதிக்கட்டப் போரில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய மூன்று உறுப்பினர்களை கொண்ட விசாரணை ஆணைக்குழுவை நிறுவும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு சில நாட்களின் முன்னதாக இந்த விசாரணைக்குழு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிக்கலான பிரச்சனைகளிற்கு பரிகாரத்தை கண்டறிவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கை (தாருஸ்மன் அறிக்கை), காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை (பரணகம ஆணைய அறிக்கை) ) மற்றும் UNHRC இன் அனைத்து அறிக்கைகள் தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும் என தகவல் வெளியாகியுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி பிற்பகுதியிலிருந்து மார்ச் ஆரம்பம் வரை இலங்கை தொடர்பான விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அரசாங்கம் சில உத்தரவாதங்களை வழங்கவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகயுள்ளது.


குறிப்பாக, பயங்கரவாதத் தடை சட்டத்தின் (பி.டி.ஏ) சில உட்பிரிவுகளை மறுபரிசீலனை செய்யும் என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட கைதிகளின் வழக்குகளை சட்டமா அதிபர் ஆய்வு செய்கிறார் என்றும் இலங்கை அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அனேகமாக அடுத்த வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாமென தெரிகிறது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு அமைக்கப்படும்.


கடந்த ஜெனீவா அமர்வின் போது, அரசாங்கம் அறிவித்த உத்தரவாதத்தின் பிரகாரம் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகேயும் இதனை உறுதிசெய்வதை போல, கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு தகவல்களை வழங்கியுள்ளார்.


“விடுலைப் புலிகளின் ஒரு சிறிய குழு தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் கடுமையான பயங்கரவாதிகள். ஆனால் அவர்கள் மிக நீண்ட காலத்திற்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சிலர் 15 ஆண்டுகள் வரை சிறைகளில் உள்ளனர். இது மிகவும் சரியான விஷயம் அல்ல என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். சட்டமா அதிபர் தனிப்பட்ட முறையில் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.


அத்துடன் புதிய குழு காலத்தை கடத்துவதற்கான குழு அல்ல. உலகம் மாறிவிட்டது, சான்றுகள் மாறிவிட்டன. விஷயங்கள் எங்கே என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.


இந்த உயர் ஆற்றல்மிக்க குழுவழன் மூலம், எங்களிடம் உள்ள எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டுபிடிப்பதே எங்கள் நோக்கம். சர்வதேச சமூகத்தின் கூற்றுப்படி, பொறுப்புக்கூறல், பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் இந்த இரண்டையும் தீர்க்கும் சுயாதீன வழிமுறைகளை கண்டறிவோம் என்று அவர் கூறினார்.


கோட்டபய ராஜபக்ச, போரை நடத்துவதில் நேரடிப் பங்கைக் கொண்டிருந்தார். அவர் ஆணைக்குழுவை பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப் போவதில்லை.


அவர் அதை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவராக நியமிக்கிறார். இது ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அளித்த உறுதிமொழி என்றும் தெரிவித்தார்.


இன் நடவடிக்கை ஐ.நா அதிகாரிகளையே தடுமாற வைத்துள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.