இறுதி நேரத்தில் தாலியினை தட்டி விட்டு மணப் பெண் எழுந்து ஒட்டம்!

 


21.01.21 நேற்று முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியியில் வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில்,

சினிமா படப்பாணியில் மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேப்பாபிலவினை சேந்த பெண்ணுக்கு முள்ளியவளை நாவல் காட்டினை சேர்ந்த இளைஞனுக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்ட இரு குடும்பத்தினராலும் நிச்சயிக்கப்பட்டு பெண் வீட்டில் மதிய உணவு தயார்படுத்தப்பட்ட போதும்.

சரியான மூகூர்த்த நேரத்தில் கோவிலில் தாலி கட்ட பூசகர்கள் முன்னிலையில் திருமண தம்பதிகள் கையில் தெற்பை போட்டு அமர்ந்த வேளை,

ஜயர் தாலியினை எடுத்து மணமகனின் கையில் கொடுக்க முற்பட்ட போது திருமணத்தில் விருப்பம் இல்லை. என மணப்பெண் அந்த இடத்தில் இருந்து உதாசீனம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

மணப்பெண்ணினை பல பெரியவர்கள் சமரசம் செய்ய முயற்சித்த போதும் இணங்காத நிலையில் மாப்பிளையும் மாப்பிளை வீட்டாரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.