பிள்ளையான் தொடர்பில் மற்றுமோர் சர்ச்சை!!

 


கச்சேரிக்கு பக்கததில் உள்ள Guest House ( மதுபான விருந்தகம் ) பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.


இந்த இடத்தினை Lankan Rest House என்னும் பெயரில் இப்போது பிள்ளையானே நடாத்தி வருகிறார்.


இது கச்சேரிக்கும் மாநகரசபைக்கும் செல்லும் சந்தியில் வாவிக்கரை ஓரமாக இருக்கும் பிரமாண்டமான காணியும், பழமை வாய்ந்த கட்டிடமும்.


அந்த மதுபானசாலை பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து பிள்ளையான் தான் நடாத்தி வருகிறார்.


இது கச்சேரிக்கு வரும் வெளிமாவட்ட அதிகாரிகள் தங்குவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடம்.



கச்சேரியின் கீழேயே இது இயங்கி வந்தது. ஒவ்வொரு வருடமும் டென்டர் கேள்வி மனு கோரப்பட்டு வழங்கப்படுவது வழங்கம், ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதனை பிள்ளையான் தனது பினாமி ஒருவரின் பெயரில் எடுத்தார்.


13வருடங்களுக்கு மேலாக கேள்வி மனு கோரப்படாது பிள்ளையானே இதனை நடத்தி வருகிறார். இந்த காணிக்கும் கட்டிடத்திற்கும் பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.


இது மாவட்ட செயலகத்திற்கு கீழ் ( கச்சேரி ) இருக்கும் அரச காணி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கச்சேரியின் நிர்வாகத்தின் கீழ் இது போன்ற Rest Houst களை ஆங்கிலேயர் அமைத்தனர்.


ஏனைய மாவட்டங்களில் இன்றும் கச்சேரியின் கீழ் இயங்குகிறது. ஆனால் மட்டக்களப்பில் பிள்ளையான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கைப்பற்றி விட்டார்.


அரசகாணியும் சொத்தும் என்பதால் பிள்ளையானுக்கு எதிராக யாரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை, அரசாங்க அதிபர் செய்யலாம். ஆனால் பிள்ளையானுக்கு எதிராக அரசாங்க அதிபர் செயற்பட வில்லை.


காணி கள்ளர்களின் கிழக்கு மீட்ப்பு கோசத்தில் இதுவும் ஒன்று, இவரை எல்லாம் நம்பி வாக்களிக்கும் மக்கள் தான் பாவம், ஒவ்வெரு நாளும் விடிந்ததும் பாருங்கள் உங்கள் உறுதி உங்களின் பெயரில் உள்ளதா என என்று முக்கிய பிரமுவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.