பொலிஸ் இன்ஸ்பெக்டரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

 


போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் ஜனக்க பிரசன்ன சமரசிங்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நேற்று (18) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்த 5 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டு, அதன் தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, தொலைபேசி பணக் கொடுக்கல் வாங்கல்களினூடாக போதைப்பொருள் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.