ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு!


 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.

எவ்வாறாயினும் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்பு

லனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சில தினங்களில் அவர் சாட்சி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் சாட்சி வழங்கியதன் பின்னர் சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விசாரணை அறிக்கை இம்மாதம் 31ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.