மேலும் ஒரு பாடசாலை வடமராட்சியில் மூடப்பட்டது!!

 


அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வியாபாரிமூலை பகுதியில் உள்ள பாடசாலையையும் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களையும் தனிமைப்படுத்தும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .  RAT பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரின் பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலை மற்றும் 32 மாணவர்கள், 4 ஆசிரியர்கள்  ஆகியோரை தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கையை  பருத்தித்துறை சுகாதார பணிமனை மேற்கொண்டு வருகிறது. 


மூதூர் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஒருவருக்கு RATபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 19 ம் திகதி முதல் 6ம் திகதி வரை அல்வாய் வடக்கு  பகுதியில் தங்கியுள்ளார். இதனால் குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நடமாடிய இடங்களின் தகவல்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் அவர்களினால் சேகரிக்கப்பட்டது. 


இதில் குறித்த தொற்றாளரின் பிள்ளைகள்  வியாபாரிமூலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு கற்றல் நடவடிக்கைக்காக கடந்த 5,6,7ம் திகதிகளில் சென்றமை தெரியவந்துள்ளது.  இதனையடுத்து குறித்த பாடசாலை மற்றும் 32 மாணவர்களும், 4ஆசிரியர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இப்பாடசாலையின் அதிபர் ஏற்கனவே புலோலி தொற்றாளர் சென்றுவந்த தொலைத்தெடர்பு சேவை நிலையத்துக்கு சென்றதால் தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.