தனிமைப்பட்டுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு!!
கிழக்கு மாகாணத்தில் முடக்கப்பட்ட பல்வேறு பகுதிகள், இன்று காலை 5:00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம சேவகர் பிரிவு அக்கரைப்பற்று நகர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01 கிராம சேவகர் பிரிவு, ஒலுவில் 02 கிராம சேவகர் பிரிவு, அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் , ஆலையடிவேம்பு பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8/1 கிராம சேவகர் பிரிவு,அக்கரைப்பற்று 8/3 கிராம சேவகர் பிரிவு,அக்கரைப்பற்று 09 கிராம சேவகர் பிரிவு என்பனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை