உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் களேபரம்!

 


சுன்னாகம் நிலத்தடி நீர் சர்ச்சைகளுடன் தொடர்புபட்டதாக கருதப்படும் நொதேண் பவர் நிறுவனம் மீண்டும் தமது மின் உற்பத்தி நிலையத்தை திறக்கவுள்ள நிலையில் உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விவகாரத்தால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த நிறுவனம் மீளவும் தமது பணிகளை தொடங்கவுள்ளதை மக்கள் எதிர்க்கும் நிலையில் மக்கள் விரும்பாத ஒன்றை அனுமதிக்கமாட்டோம் என எழுத்துமூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்புமாக ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகளை பணித்துள்ளது.


நேற்றைய தினம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கலந்துரையாடலில்

குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.


சுன்னாகம் நிலத்தடி நீரை மாசுபடுத்திய குறித்த நிறுவனமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில்


அந் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது என சிவில் அமைப்புகள் சார்பில் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.



10 வருடங்கள் கடந்தும் சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பதற்கு குறித்த நிறுவனமே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந் நிலையில் குறித்த நிறுவனம் குறித்த பகுதிகளில் கழிவு எண்ணெய் கலப்பதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரீட்சார்த்த கொடுப்பனவு என


2 கோடி ரூபாய்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் நஷ்ட ஈடு என மக்களிடம் கையெழுத்து வாங்க நினைக்கிறார்கள்.


நமது நிலத்தடி நீரை மாசுபடுத்தி விட்டு அதற்காக ஒரு சிறு தொகையை நிதியை வழங்கிவிட்டு மீண்டும் செயற்பட ஆரம்பிக்கலாம் என நினைப்பது எக்கு மன வேதனையைத் தருகின்றது.குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் குறித்த கழிவு ஓயில் விவகாரம் தொடர்பில்


மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கிறார்களோ அவ்வாறே எமது தீர்மானம் அமையும் என தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தற்போது சுன்னாகம் பகுதிகளில் கழிவு எண்ணெய் தாக்கம் இருக்கிறதா?


என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியை அங்கஜன் விளக்கம் அளிக்குமாறு கூறியபோது குறித்த பகுதிகளில் கழிவு ஓயில் நிலவரம் தொடர்பில் தாம் ஆய்வு செய்யவில்லை என பதிலளித்தார். இதன்போது பதிலளித்த அங்கஜன் மக்களுக்கு


தெளிவான நிலைப்பாட்டை குறித்த நிறுவனமும் அதிகாரிகளும் வழங்காத வரை மக்கள் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் ஆகவே குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டதரப்பினர்களுக்கு பிரதேச அபிவிருத்தி குழு கலந்துரையாடலில்


எடுக்கப்பட்ட தீர்மானமாக சிவில் அமைப்பு பிரதிநிதிகளின் கோரிக்கை கடிதங்களையும் பெற்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.