லண்டனில் உயிரிழந்த இலங்கை வைத்தியர்!


 பிரித்தானியாவின் லண்டன் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

லண்டனில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாத்தன்டிய, வெலிப்பென்னகஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய உப்புல் நிஷாந்த திஸாநாயக்க என்ற வைத்தியராகும்.

ஒரு பிள்ளையின் தந்தையான அவர் கடந்த 20 வருடத்திற்கு முன்னர் பிரித்தானியா சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த வைத்தியர் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

North Middlesex University வைத்தியசாலையில் ஏனைய வைத்தியர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அவருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.