செட்டிகுளத்தில் சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் மீட்பு!


 வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் இன்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்குசென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் (36) என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டைமேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.