கோட்டாபயவின் உருவப் பொம்மையை எரித்த மாணவர்கள்!


 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இணைந்திருந்தனர்.

இதன்போது உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளி குழறுபடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிலுக்கு முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் உருவப் பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.