கொரோனாவால் ஒரே நாளில் 13,613 பேர் பலி!
உலகம் முழுவதும் இதுவரை 22, 76,074 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 13,613 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 469,912 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை 10,48,68,360 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 7,67,47,448 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் 105,823 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அமெரிக்காவில் மொத்தம் 2,71,42,066 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,633 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மரணமடைந்தோர் 461,564 பேராக உயர்ந்துள்ளது.
பிரிட்டன்
பிரிட்டனில் கொரோனாவிற்கு புதிதாக 19,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,71,825 பேராக உயர்வு.
ஒரே நாளில் 1,322 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பிரிட்டனில் இதுவரை மொத்தம் 10,9,335 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
பிரேசில்
பிரேசிலில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 53,164 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,339,420 பேராக உயர்வடைந்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,180 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 227,563 பேராக உயர்வடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை