முற்றாக முடங்குகின்றது கொழும்பு செட்டியார் தெரு!


 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்படும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு கொழும்பு வாழ் தமிழர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்காபரண வர்த்தக நிலையங்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரு மணி நேரத்தில் ஐஞ்சுலாம்பு சந்தியில் அமைதியான முறையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஐஞ்சுலாம்பு சந்தியில் நடத்தப்படும் போராட்டத்தில், அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.