மரத்தை பாதுகாக்க சொத்தாக பிரகடனப்படுத்திய பிக்குகள்!


 கம்பஹா தாரலுவவில் காணப்படும் ஒரு அரிய மரத்தை மகா சங்கத்தின் சொத்தாக பௌத்த பிக்குகள் இன்று அறிவித்துள்ளனர். அழிவின் விளிம்பில் இருப்பதாக கருதப்படும் Crudia zeylanica மரத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கடவதடத- மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாண பாதையில் உள்ள அந்த மரம் அழிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை, அழிக்கப்படாமல் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பிக்கு முன்னணி மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்த துறவிகள் குழு அந்த இடத்தை பார்வையிட்டு மத சடங்குகளை செய்தனர். பின்னர் துறவிகள் மரத்தைச் சுற்றி பிரித் சரங்களைக் கட்டி, மரத்தை சங்கச் சொத்தாக மாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய பிக்கு முன்னணியின் நிர்வாக உறுப்பினர் வெங்கல் தங்கல்ல நாரத தேரர், மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், தற்போது அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், வேறு பல மரங்களுடன் அபிவிருத்தி திட்டத்தில் இந்த மரத்தை அழிப்பதில் என்ன தவறிருக்கிறது என அரசாங்கம் கூறினாலும், உலகில் பல போதி மரங்கள் இருக்கும் நேரத்தில் ஸ்ரீ மகா போதியை அகற்ற யாரும் தயாராக இல்லை. மரத்தை அரசாங்கத்திடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் ஒரு அங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வென். உதஸ்கிரியா சமித தேரர், அரசு ஊழியர்கள் முதுகை நேராக வைத்துக் கொள்ளவும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும் பயப்பட வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், இன்று அவ்வாறு செய்யும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாங்கள் மட்டுமல்ல, வேடுவ தலைவரும் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர வேண்டியது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பிக்கு முன்னணியின் உறுப்பினர்கள், ஹோமகம ஆனந்த, தலஹகம ஞானசிறி, அத்தயலா விஜித தேரர், கம்பஹா மாவட்ட சோசலிச இளைஞர் சங்கம் மற்றும் முத்துராஜவெல சரணாலயம் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கம்பஹா மாவட்ட வன அலுவலர் தேவானி ஜெயதிலக மரத்தை பாதுகாக்க அண்மையில் எடுத்த நடவடிக்கை அரச உயரதிகாரிகளின் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிக்குகள் இதில் தலையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.