பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை!


 இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 146 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் கிறிஸ்மஸைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31, நவம்பர் 20 மற்றும் ஜனவரி 08 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின மன்னிப்பின் போது விடுவிக்கக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத் துறை அறிவித்துள்ளது.

இன்று விடுவிக்கப்படவுள்ள பல கைதிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனைகளின் முடிவுகள் கிடைத்தவுடன் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.