மத்திய அரசால் கூடுதல் நிதி ஒதுக்கீடு!

 


தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல்களால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புக்கு, தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இந்திய மதிப்பில் 286.91 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியுதவியை வழங்க மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 2020ஆம் ஆண்டில், வெள்ளம், புயல், பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பிஹார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு தேசியப் பேரிடர் நிவாரண மேலாண்மை நிதியிலிருந்து மேலதிகமாக மூவாயிரத்து 113.05 கோடியை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக இதன்போது அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இதேவேளை, 2020-2021 நிதியாண்டில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 28 மாநிலங்களுக்கு இதுவரை 19 ஆயிரத்து 36.43 கோடியையும், தேசியப் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து நான்காயிரத்து 409.71 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.