கோட்டாபயவை போன்று என்னால் முடியாது!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணியாற்றுவதனை போன்று, தன்னால் பணியாற்ற முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் பணிபுரியும் தலைவர்.

ஜனாதிபதி, அனைத்து உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்கள் தொடர்பிலும் புரிந்துணர்வுடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இவ்வாறு பணியாற்றுகின்றமையினால், நாம் அதிலிருந்து பயனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு என தான் நினைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.