கோட்டாபயவுக்கு சட்டம் இல்லையா?

 


ஜனாதிபதிக்கு கொரோனா சட்டங்களைப் பின்பற்ற எந்த நடைமுறைகளும் இல்லையா? சாதாரன மக்களுக்கு அவர்களுடைய நிகழ்வுகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் மூன்று மாதங்களுமாக ஆகிறது. சௌபாக்கியத்தின் தொலை நோக்கை நடைமுறைப்படுத்த மூன்றில் இரண்டு பெருன்பான்மை கேட்டனர். மக்கள் அதையும் வழங்கினார்கள்.

பின்னர் 20ஆவது திருத்தத்தையும் எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்டு சாதகமாக்கிக் கொண்டனர். ஆனால் இவ்வளவு அதிகாரம் கொண்டும் இவ்வளவு காலம் கடந்தும் மக்கள் நலன்

சார்ந்த எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

கொரோனா பிரச்சினையினால் வருவாய் இழந்த மக்களுக்கு நிவாரனங்களைக் கூட முறையாக கொடுக்க முடியாத நிலைக்கு இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாடளாவிய ரீதியாக பரவியுள்ளது. இந்த சமூக பரவலை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது இல்லை. நாளாந்தம் காலையில் 700 பேர் சுகமடைந்ததாக வெளியெறுகின்றனர். அதே வேளை மாலை 500 பேர் புதிதாக இனம் காணப்படுகின்றனர்.

பின்னர் இரவில் மேலும் 500 பேர் அளவில் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. எனவே தொற்றாளர்களும் சுகமடைபவர்களும் ஒரே மட்டத்தில் தான் உள்ளது.

கொரோனா மரணங்களையும் தொற்றாளர் எண்ணிக்கையையும் அரசாங்கம் தொடர்ந்தும் மறைக்கிறது. இவ்வாறான ஒரு நாட்டில் எம்மால் முன் செல்ல முடியாது. உண்மைகளை தெரியப்படுத்துங்கள். புள்ளிவிபரங்களை மறைப்பு தொடர்பாக குறிப்பிட்ட துறை சார்ந்த வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்திய ஆய்வு கூட அதிகாரிகள் சங்கம் என்பன கூடத் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. இது நல்ல விடயம். மிக அண்மைக்காலத்தில் 396 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இது ஆரோக்கியமான நிலை இல்லை.

ஜனாதிபதிக்கு கொரோனா சட்டங்களைப் பின்பற்ற எந்த நடைமுறைகளும் இல்லை. சாதாரன மக்களுக்கு அவர்களுடைய நிகழ்வுகளுக்கு மட்டும் தான் இந்த சட்டம்.இந் நாட்களில் ஜனாதிபதி கம சமக பிலிசந்தர நிகழ்ச்சியில் கிராமங்களில் பங்கேற்கிறார்.

அங்கு எந்த சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. ஜனாதிபதிக்கு கொரோனா சட்டங்கள் பின்பற்ற வேண்டிய தேவை இல்லையா? நாட்டித் தலைவர் முதலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களும் சட்டங்களை பின்பற்றுவர்.

கொரோனா நிலைமைகளால் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளன.

பொருடகளின் விலையைக் குறைக்க பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டும் அனைத்து வர்த்தமானிகளும் பொய்ல் ஆகிவிட்டன.உரிய நிர்னய விலைக்கு சந்தையில் பொருட்கள் இல்லை.அன்மையில் பொருளாதார விவகார அமைச்சர் பந்துல குணவர்தன “பிரிந்துணர்வுடன் விலை கட்டுப்பாடு” என்ற புதிய கோஷத்துடன் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 28 பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தமானிக்கு ஏற்ற விலை சந்தையில் இல்லை. அத்தியவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்களால் இதற்கு முகம் கொடுக்க முடியாத நிலையை எதிர் நோக்கியுள்ளனர். இந் நிலை தொடருமாக இருந்தால் மக்கள் வீதிக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

கடந்த 8 மாதங்களாக மஞ்சலைத் தடை செய்துள்ளனர். அரசாங்கம் கூறியது போல் புதிய அறுவடையும் இல்லை. இறக்குமதியும் இல்லை. மஞ்சல் மிக முக்கிய ஆயுர்வேத மூலிகை என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கூறுகின்றனர். இன்று இதன் விலை அதிகரித்துள்ளது.

மஞ்சலின் தேவையைப் பூர்த்தி செய்ய கலப்படம் செய்யப்பட்ட மஞ்சலை இன்று சந்தையில் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.