16 கிலோ கேரளா கஞ்சா பறிமுதல்!

 


யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட  சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால்  16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள  கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 5 மில்லியன் ரூபா என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும் மன்னார் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட  25 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலை மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

முழு நடவடிக்கைகளும் சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்தப்பட்டதாக கடற்படை உறுதிசெய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.