250,000 டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டது ஈரான்!


 சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 250,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியை ஈரான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டுள்ளது.

நாட்டிலும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்த இறப்புகள் 60,000 ஐ தாண்டியுள்ள நிலையில் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

இதேவேளை இந்த மாதம் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஈரானை வந்தடைந்த நிலையில் அது, முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டன.

இந்நிலையில் சினோபோர்ம் தடுப்பூசி ஈரானுக்கு இறக்குமதி செய்யப்படும் இரண்டாவது வெளிநாட்டு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி முடிவடைவதற்கு முன்னர் 1.3 மில்லியன் ஈரானியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் பாரத் பயோடெக்கிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஈரானிய அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.