பொத்துவில்🤝பொலிகண்டி.!!


நடவுங்கள் நடவுங்கள்

நாளை வரும்..!


இரவுக்கு

முடிவாக

காலைவரும்! 


காற்றுவந்து

கதிர்கள் தருமா?

கலப்பை எடுங்கள்!


மாற்றுத் தோளில்

ஏறவேண்டாம். 

புயலாய் எழுங்கள்!


எட்ட நின்று

பார்க்கலாமா?

முட்டிவிடுங்கள்!


பயந்து பயந்து

வேர்க்கலாமா?

வேலை எடுங்கள்!


பிரிந்து நின்று

எரிக்கலாமா?

கரங்கள் கொடுங்கள்!


நாங்கள் "காத்தபுத்தம்" 

பாம்பாய் கொத்தும்.

பாய்ந்து  அடியுங்கள்!


ஆண்டுவிட்டு

தூங்கிவிட்டோம்.

போரைத்தொடுங்கள்!


நடவுங்கள்.. நடவுங்கள்

நாளை வரும்!


இரவுக்கு

முடிவாக

காலைவரும் !


அகரன் பூமிநேசன்

04.02.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.